​திமுக கூட்டணியில் இருந்து விலக இது தான் காரணமா?

 பாராளுமன்ற தேர்தலில் பாமக திமுகவுடன் தான் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கபட்டது. பாமக திமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கும் போது, திருமாவளவன் பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால், விடுதலை சிறுத்தைகள் அந்த கூட்டணியில் இருக்காது என தெரிவித்தார் இதற்கிடையே அன்புமணி ராமதாஸ்சின் மாமனாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி மூலமாக கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி இருக்கிறார்கள். இதற்கிடையே ராமதாஸ் தனியாக அதிமுகவிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் ராகுல் காந்தியும் ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி . பாமக இந்த கூட்டணிக்குள் வருவதால் இன்னும் கூட்டணி வலுபெறும் என தெரிவித்தார் பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினால் திமுக கூட்டணிக்குள் பெரிதாக பாதிப்பு இருக்காது. இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் பாமகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். பாமகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் இறங்கி வந்தார். இருந்தாலும் ராஜ்யசபா சீட் வேண்டும் என பாமக அடம் பிடிக்க, பிடிவாதமாக ஸ்டாலின் அதற்கு மறுத்து விட்டார். இனி திமுகவிடம் பேசி பிரயோசனமில்லை? என்கிற நிலைமையில் தான் அதிமுகவிடம் உடனடியாக பேசி முடித்து விட்டார்கள். பாமக எதிர்பார்த்தற்கு மேலே அதிமுக கொடுத்து விட்டது.

^