பாஜகவின் 8 தொகுதியில் ... தேமுதிகவிற்கு 4 தொகுதி தர தயார்.. தேமுதிக தொண்டர்கள் அதிருப்தி.! .

. .

அதிமுக பாமக உடன் கூட்டணி வைப்பது மூலம் வட மாவட்டங்களில் வெற்றி பெற்று விடலாம். கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் அதிமுகவும், பாமகவும் , பாஜகவும் கூட்டணி அமைத்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிற நோக்கில் இருக்கிறது அதன் படி தான் பாமகவிற்கு 7 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது பாஜகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது அதிமுக. கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த்துடன் பேச்சு வார்த்தையை விமான நிலையத்தில் முடித்து விட்டார் என்கிற தகவல்கள் வந்தன. அப்படி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், பாஜகவிற்கு ஒதுக்கபட்ட தொகுதிகளை தான் பிரித்து கொடுக்க வேண்டும் என அதிமுக சொல்லி விட்டது பாஜக தொண்டர்கள் 8 தொகுதி நம் கட்சிக்கு போதாது? என்கிற பீலிங்கில் இருக்கிறார்கள் இந்த சமயத்தில் தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் பாமகவை விட அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தான்.. தேமுதிக அதிமுக கூட்டணிக்கு சம்மதிக்கும் என தொண்டர்கள் கூறுகிறார்கள் இந்த சூழ்நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கபட்ட 8 தொகுதிகளில் 4 தொகுதியை தேமுதிகவிற்கு கொடுக்க பாஜக முன் வந்தாலும், தேமுதிக அதை ஏற்குமா? என்பது சந்தேகம் தான்..

^