வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் …. சந்திர பாபு நாயுடு அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட, நாட்டையே உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அசத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கெல்லாம் ஆந்திர அரசு ஆதரவளிக்கும், வீரர்கள் செய்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் என்று சந்திரபாபு நாயுடு. தெரிவித்துள்ளார் “நாடே அதிர்ச்சியடைந்துள்ளது. வீரமரணம் எய்திய ஜவான்களின் குடும்பத்தினாருக்கு நாம் அனைவரும் தோள்கொடுப்பது அவசியம்” என்றார் சந்திரபாபு நாயுடு.

^