ஆந்திராவிற்கு மாறுதலாகிறார் கிரண்பேடி..! . .

  .

பிப்ரவரி கடைசி வாரத்தில் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆந்திரா மாநிலத்திற்கு மாறுதலாகி போய்கிறார் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது அதே சமயத்தில் தமிழக கவர்னர் கூடுதல் பொறுப்பாக பாண்டிசேரியை பார்த்து கொள்வார் என தெரிவிக்கிறார்கள். பாண்டிச்சேரியில் தற்போது ஹெல்மெட் பிரச்சனையை பெரிதாக்கி, அவரே ரோட்டில் இறங்கி ஹெல்மெட் போடாதவர்களை கண்டித்தும், 3 பேருக்கு மேல் பைக்கில் போவோர்களை நடுரோட்டில் இறங்கி விட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்க வைத்ததும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், புதுச்சேரி பாஜகவினரும் அதிருப்தி அடைந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க, பிரதமர் மோடி டென்ஷனாகி விட்டார் சந்திர பாபு நாயுடுக்கு நெருக்கடி கொடுக்க, கிரண்பேடியை அந்த மாநில கவர்னராக்க போகிறார் இதன் மூலம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார் பிரதமர் மோடி தேர்தல் சமயத்தில் சந்திரபாபு நாயுடுக்கு நெருக்கடி கொடுத்து, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக நினைக்கிறார் .. ஆந்திராவிற்கு கிரண்பேடி மாறி விடுவார் என புதுச்சேரி காங்கிரஸ் உற்சாகமாக இருக்கிறார்கள்.

^