இனி 10 வருஷத்திற்கு ஸ்டாலின் தான் முதல்வர்..! முகேஷ் அம்பானி

.தேர்தல் சமயத்தில் முக்கிய கார்ப்ரெட் கம்பெனிகள் தனியார் உளவுதுறை மூலமாக மாநிலங்களில் சர்வே நடத்தி, வெற்றி பெற இருக்கும் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்குவது வழக்கம் அந்த அடிப்படையில், தொழிலபதிபர் முகேஷ் அம்பானி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார். முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவிற்கு வரும் மார்ச் 9 ந்தேதி திருமணம் நடக்க இருக்கிறது அதற்கு பத்திரிக்கை வைக்க தான் முகேஷ் அம்பானி வந்து ஸ்டாலினை பார்த்து இருக்கிறார் என தெரிவிக்கபட்டாலும், தேர்தல் நிதி கொடுக்க தான் வந்து இருக்கிறார் என்கிறார்கள் இதே போல் கடந்த ஜனவரி மாதம் தொழிலபதிவர் ரத்தன் டாடா வந்து ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார் இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்கள் தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இதை பாஜக மேலிடம் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறது கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும், ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தோல்வி அடைந்து, நிதி இல்லாமல் இந்த தேர்தலை சந்திக்கிற சூழ்நிலையில், இப்படி தொழிலதிபர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பிரதமர் மோடிக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது அதே போல் அடுத்த 10 வருஷத்திற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தான் முதல்வர் என முகேஷ் அம்பானி தெரிவித்து இருக்கிறார். இது ஸ்டாலினை உற்சாகபடுத்தினாலும், விரைவில் அவர் வீட்டில் ரெய்டு நடவடிக்கை பாயலாம்? என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

^