இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கொடைக்கானலில், 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

^