மத்திய அமைச்சர் பதவிகளை குறிவைக்கும் அதிமுகவினரின் வாரிசுகள்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ.க அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக இணைகிறது என தகவல் பரப்புவதற்கு பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதனை முன்கூட்டியே அறிந்த அதிமுக தலைமை அதனை வலிமையாக மறுத்ததால், தற்போது அதிமுக தலைமையில் பா.ஜ.க கூட்டணி அமைந்துள்ளதாக செய்திகள் அரசியல் களத்தில் உள்ளது. உண்மையில் தற்போது வரை பா.ஜ.க கூட்டணி சேர்வதில் அதிமுகவினர் யாருக்கும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழக அமைச்சர்கள் பலரும் ஜெயிலுக்குப் போகவேண்டியிருக்கும்; எப்படியாவது பா.ஜ.கவுடன் கூட்டணியை வலுப்படுத்தி ஜெயிக்கப்பாருங்கள் என பா.ஜ.க மேலிடம் அதிமுகவிடம் வலியுறுத்தி இருப்பதால் வேறு வழியின்றி அதிமுக கூட்டணிக்கு ஒத்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் அரசியல் களத்தில் உள்ளது. கூட்டணி என்ற பெயரில் 20 தொகுதிகள் வரை ஒதுக்கி கொடுப்பதற்கு, அதிமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் உள்ளது, அதில், வேலுமணி தனது சகோதரருக்காகவும், இன்னொரு தொழிலதிபர் நண்பருக்காகவும் கொங்கு பகுதியில் இரு தொகுதிகளுக்கு விருப்பமனு வாங்கி வைத்துள்ளார் என்றும், இது பற்றிய தகவல் முதல்வருக்கு தெரியவர வேலுமணியைக் அழைத்து கண்டித்துள்ளாராம், இதனால் வேலுமணி முதல்வர் மீது சற்று அதிருப்தியில் இருப்பதாக தவவல்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு முக்கிய தொகுதிகளும் பா.ஜ.கவுக்கு செல்ல உள்ளது. இது அதிமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல் இந்த முறை மத்தியில் கூட்டாட்சி தான் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெற்றிப்பெறும் வேட்பளார்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. ஆகையால் அதிமுகவினர் தங்களது வாரிசுகள் மற்றும் உறவினர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையிலே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரன், முதல்வரின் மகன் மிதுன், தங்கமணி,வேலுமணி, வீரமணி, சி.விஸ்.சண்முகம், எம்.சி.சம்பத், வளர்மதி வரை அனைவரும் தங்களது உறவினர்களை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் உள்ளது.

^