ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுங்கள்

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து பிப்ரவரி 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளின் விவரங்களை தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

^