கும்பகோணம் வேதவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் காசிராமன் தெருவிலுள்ள வேதவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 27ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ, லட்சுமி ஹோமம், மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. 28ம் தேதி காவிரியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கோபூஜை, கஜபூஜைகள் நடைபெற்றது. 29ம் தேதி விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, சுமங்கலி பூஜைகள் நடைபெற்றது. நேற்று (30ம் தேதி) காலை பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாட்டை தொடர்ந்து 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

^