கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதல் மண்டகப்படியான பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி குழுவினரால் காலையிலிருந்து பெண் குழுவினரால் வண்ண, வண்ண மலர்களால் விதவிதமான பூ, சாமி உருவங்களிலும் கோலமிட்டிருந்தனர். பூ அலங்கார மண்டகப்படி நேற்று காலை 10.30 மணிக்கு அபிஷேகத்துடன் துவங்கி, 12 மணியளவில் தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் 12 மணிக்கு மேல் 2 மணிவரை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேல் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மண்டபம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்து. இரவு 8.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாட்டினை பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி தலைவர் சுந்தரராஜன், பொதுச்செயலாளர் பாலன், நிர்வாக செயலாளர் சந்தானகிருஷ்ணன், பொருளாளர் காந்திராஜன், இணை தலைவர்கள் பிச்சை மாணிக்கம், தினேஷ், கௌரவ தலைவர்கள் லட்சுமணன், பாண்டுரங்கன், இணைச் செயலாளர் பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் சிவராம், ஸ்ரீதர் உள்பட பலர் செய்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை கண்டு தரிசித்து சென்றனர்.

^