உலகை ஆளப் போகும் கடவுளின் கனி

* மாங்க் ஃப்ரூட்டை நன்கு காய வைத்து அதிலிருந்து ஒரு வகை ஸ்வீட்னர் தயாரிக்கிறார்கள். ஏனெனில், கரும்பு சர்க்கரையை விட 150-லிருந்து 250 மடங்கு அதிகமான இனிப்பை அளிக்கக் கூடியதாக இப்பழம் இருக்கிறது.


* காஃபி, டீ, சாலட், சாஸஸ், ஓட்ஸ் சேர்த்த உணவுகள், யோகர்ட் போன்றவற்றுடன் சேர்த்து மாங்க் ஃப்ரூட்டின் ஸ்வீட்னரை சேர்த்து சாப்பிடலாம்.

*மாங்க் ஃப்ரூட் பழத்தை ஃப்ரெஷ்ஷாக அப்படியே சாப்பிடலாம். ஆனாலும், இந்தியாவில் பல இடங்களிலும் உலர்ந்த பழமாகவே கிடைக்கிறது.

* கலோரியும் கார்போஹைட்ரேட்டும் மற்றும் கொழுப்பும் சதவிகித அளவில் பூஜ்யம் என்பதால் எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ். அதனால் தினசரி நீங்கள் பயன்படுத்தும் சர்க்கரைக்குப் பதிலாக மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னரை பயன்படுத்தினால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

* மாங்க் ஃப்ரூட்டின் அறிவியல் பெயர் Siraitia grosvenorii. இதன் சீனப்பெயர் லுயோ ஹான் க்யோ (Luo han guo).

* மாங்க் ஃப்ரூட்டினை முதன் முதலில் விளைவித்தவர்கள் சீனாவைச் சேர்ந்த துறவிகள் என்கிறார்கள். இதுதான் மாங்க் ஃப்ரூட்டின் பெயருக்கான மூல காரணம். இது ‘புத்தரின் கனி’ எனவும், சில இடங்களில் ‘கடவுளின் கனி’ எனவும் அழைக்கப்படுகிறது.

* பெரும்பாலும் தெற்கு சீனாவிலும் வடக்கு தாய்லாந்தின் சில பகுதிகளிலும் விளையக் கூடியது மாங்க் ஃப்ரூட். பச்சை நிறத்தில் இருந்தாலும் நம்மூர் கிர்ணி பழம் போன்ற ஒரு வகையான பழம்தான் மாங்க் ஃப்ரூட்.

* பெரும்பாலும் காய்களே பச்சை நிறத்தில் இருக்கும். பழங்களாக கனிந்த பிறகு நிறம் மாறிவிடும். ஆனால், மாங்க் ஃப்ரூட் பச்சை நிறத்திலேயே இருக்கும். உலர்ந்தவுடன் ப்ரௌன் நிறத்தில் மாறிவிடும்.

* தற்போது ஆரோக்கியத்தை விரும்புகிறவர்களின் உணவுப்பட்டியலில் மாங்க் ஃப்ரூட் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது.

* சமீபத்தில் மாங்க் ஃப்ரூட்டை இந்தியாவில் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முதன்முறையாக இமயமலை சார்ந்த சில பிரதேசங்களில் மட்டும் மாங்க் ஃப்ரூட் பயிர் செய்யப்பட்டிருக்கிறது.

* மாங்க் ஃப்ரூட் மரத்தை வளர்ப்பது சிரமம். பொருளாதார ரீதியாக அதிகம் செலவு தேவைப்படும் ஒரு விஷயமும் கூட. அதனால் இந்த ஸ்வீட்னர் மற்ற ஸ்வீட்னர்களை விட சற்று கூடுதல் விலையில்தான் கிடைக்கும். எனவே, நம் உள்ளூர் சந்தையில் ஃப்ெரஷ்ஷாக கிடைப்பது சிரமம்.

* நீரிழிவும், உடல்பருமனும் மிகப்பெரிய சர்வதேச பிரச்னையாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் மாங்க் ஃப்ரூட்டுக்கு சர்வதேச சந்தையில் மிக முக்கியமான இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

* அநேக ஊட்டச்சத்து நிறைந்த இனிப்புகள் குடல் பாக்டீரியா மற்றும் குடலின் உட்பொருளை பாதிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால் சர்க்கரைக்குப் பதிலாக இந்த ஸ்வீட்னரை தொடர்ந்து பயன்படுத்த நினைப்பவர்கள் பயன்படுத்தும் முன்பு மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது சிறந்தது.

* மாங்க் ஃப்ரூட்டின் பல்வேறு நன்மைகள் குறித்தான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

* வயிற்றுவலி, வாந்தி, நாக்கு தடித்துப் போதல், மூச்சிரைப்பு, மயக்கம், படை போன்ற பலவிதமான அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

* மாங்க் ப்ரூட் ஸ்வீட்னரை கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். பேக் பண்ணி விற்பதற்கும் மாங்க்
ஃப்ரூட்டுகள் பாதுகாப்பானவை.

* மாங்க் ஃப்ரூட் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை. ஆதலால் ஃப்ெரஷ்ஷான பழம் நமக்கு கிடைக்க அதிகம் வாய்ப்பில்லை. ஆசிய சந்தையில் சில இடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மாங்க் ஃப்ரூட் கிடைக்கும்.

* ‘மாங்க் ஃப்ரூட் உடலுக்குப் பாதுகாப்பானது. இதனை கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவரும் சாப்பிடலாம்’ என்று FDA தெரிவித்துள்ளது.

* மாங்க் ஃப்ரூட் அழற்சிகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது எனவும் இந்த ஸ்வீட்னர் புற்றுநோயைத் தடுக்கவும் சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கவும் உதவுகிறது என 2011-ல் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதனால் சில ஹாட் டிரிங்ஸ் வகைகளையும் இந்த ஸ்வீட்னரை பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள்.

* சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பும் பழமாக மாங்க் ஃப்ரூட் உருவாகி வருகிறது. காரணம், ரத்தத்தின் சர்க்கரை அளவை இது அதிகப்படுத்துவதில்லை. இதில் கலோரியும் கார்போஹைட்ரேட்டும் சதவிகித அளவில் பூஜ்யம் என்பதால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது.

* இருமல் மற்றும் தொண்டைப்புண்ணை சரி செய்ய பயன்படுகிறது. பெரும்பாலும் இது மூலிகை டீ அல்லது சூப் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

* மாங்க் ஃப்ரூட்டில் கார்போஹைட்ரேட்டும், கலோரியும் இருக்காது என்றாலும், அதிலிருந்து தயாரிக்கப்படும் தின்பண்டங்களில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் இருக்காது என்று நினைப்பது தவறு. இந்த தின்பண்டங்களின் தயாரிப்பின்போது மாங்க் ப்ரூட்டின் இனிப்புடன் செயற்கையாக வெள்ளை சர்க்கரையையும் சேர்ப்பார்கள்.

* குளிர்பானங்களிலும் இதன் ஸ்வீட்னர் முக்கியமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

* சாக்ரீன் போன்ற மற்ற ஸ்வீட்னர்களை காட்டிலும் இனிப்பானதாகவும் கசப்பு குறைவாகவும் உடையது மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னர்.

* சீனாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் இப்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன வைத்திய முறைகள் இதன் சிறந்த ஆேராக்கிய பலன்களை காலம் காலமாக மக்களுக்கு உணர்த்தி வருகின்றன.

* புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற வகையினை சேர்ந்த பழம் என்பதால் இது மிகமிக அரிதாக ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

* சில ஸ்வீட்னர்களை உட்கொள்ளும்போது அலர்ஜி, வீக்கம், வாயுத்தொல்லை போன்ற பின் விளைவுகள் இருக்கும். மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னரில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. பலரும் இன்று மாங்க் ஃப்ரூட்டை விரும்ப இது முக்கிய காரணம். 

^