சிறப்புக் காவல்படை காவலர் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி சிறப்புக் காவல்படை காவலர் ஒருவர் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அரியலூர் மாவட்டம் வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (26). இவர் திருச்சி சிறப்புக் காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார் அதிகாலை தனது அறையில் முத்து தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் கசிந்திருந்தது. மேலும் அந்த அறையில் உள்ள வாஷ் பேசினிலும் ரத்தம் இருந்தது.தனது அறையில் காவலர் முத்து கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.முத்து இறந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை காவலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பாதுகாப்பு பணிக்கு முத்து சென்றிருந்தார்.அப்போது தாய் தந்தை இல்லாத இளம்பெண்ணின் வீடும் இடிக்கப்பட்டது. அந்த பெண் அழுததை தாங்க முடியாமல் நண்பரிகளிடம் முத்து கூறிக் கொண்டிருந்தார். மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறோமே? என்று புலம்பி இருக்கிறார்.இதன்பின் நேற்று அவர் அறைக்கு வரவில்லை. இன்று காலை நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் முத்துவை இறக்கி விட்டு சென்றார்.அதன்பின் அவர் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் வந்து பார்த்தபோது அறையில் தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது என்கின்றனர்.கடிதத்தில் தனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை என்று முத்து எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

^