பந்துவீச்சு சட்டவிரோதமானது! இந்தியா செல்லும் அகில தனஞ்சய

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.தனது பந்து வீச்சு முறையை மறுபரிசீலனை செய்வதற்காக அவர் நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது. இதனையடுத்து, உடன் அமுலுக்குவரும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்துவீச அகில தனஞ்சயவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்ற போட்டியின்போது இவரது பந்து வீச்சில் சந்தேகம் எழுந்த நிலையில், 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் ஐ.சி.சி. அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

^