இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராகும் பாகிஸ்தான்

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக பேசினார்.அதில்,வருகிற ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், தலிபான்களின் பெரும் தாக்குதல் நடத்தலாம் இதனால் தெற்கு ஆசியாவில் 2019-ல் பெரும் சவால்கள் இருக்கும்.பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுப்பதில்லை மேலும் அந்த அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துகிறது.இதனால் பயங்கரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது.இந்த பயங்கரவாத அமைப்புகள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது மேலும் அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும்,அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். 

^