ரொட்டிக்காக போராட்டம் 40 பேர் பலி

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டது மேலும் ரொட்டியின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் சூடானில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுபலரும் உயிரிழந்து வருகின்றனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் தற்போது வரை 40 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

^