பாமகவை விட அதிக தொகுதி கேட்கும் தேமுதிக

உடல்நலக்குறைவால் தற்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவார் என்று தகவல்கள் உள்ளது.தற்போதைய சூழலில் பிரேமலதா மூலம் தமிழகத்திலுள்ள நடக்கும் அரசியல் சுழல் குறித்து அவர் கேட்டறிவதாகவும், அதிலும் குறிப்பாக மகன் விஜயபிரபகாரன் செயல்பாடுகள் குறித்தும் அதற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு குறித்தும் ஆர்வமாக அவர் கேட்பதாகவும், இதையடுத்தே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சுதீஷ் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.இந்த ஐவர் குழுவானது தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு எந்ததெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து இறுதியாக 10 தொகுதிகளை கண்டறிந்துள்ளது.அதன்படி தென்சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புத்தூர், விழுப்புரம், திருச்சி ஆகிய 10 பகுதிகளில் கண்டறிந்து இருப்பதாகவும்,இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதே போல் இந்த கூட்டணியில் பா.ம.கவும் உள்ளதால், பா.ம.கவை காட்டிலும் ஒரு தொகுதியாவது தங்களுக்கு அதிகமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு வருவதாகவும் தகவல்கள் உள்ளது.வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னை வரும் கேப்டன், மார்ச் மாதத்தில் திருப்பூரில் மாநாடு நடத்தவுள்ளார் என்றும், அந்த மாநாட்டில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.தற்போதைய தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை, கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் இல்லாததை தேமுதிக பாசிட்டிவாக பார்ப்பதாகவும், கேப்டன் வந்த பின்பு தங்களது அரசியல் வியூகம் வகுக்கப்படும் என தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது

^