கோலியால் மறக்கடிக்கபடுகிறார் ரோஹித் ஷர்மா

ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்தில் இந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் உலகக்கோப்பை, இந்தியா எப்படி செய்லபடும் என்பது குறித்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டாமினிக் கார்க் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-இங்கிலாந்து கிரிக்கெட் சமீப காலங்களில் பிரமாதமாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. பலரும் உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு தான் வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.ஆனால், இந்திய அணியை எடுத்துக் கொள்ளுங்கள் ஒருநாள் போட்டிகளை வெற்றி பெற என்ன தேவையோ அத்தனை விஷயங்களையும் சரியாக கையில் வைத்துள்ளது திறம்படக் கொண்டுள்ளனர். இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே பிரமாதமாக விளையாடுகின்றனர்ரோஹித் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்.விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் ரோஹித் சர்மா எவ்வளவு பிரமாதமாக ஆடுகிறார் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் ரோஹித்தும் பிரமாதமான வீரர் தான்.இந்திய அணியைப் பொறுத்தவரையில் தோனி இந்த வயதிலும் சிறப்பாக விளையாடுகிறார். இந்திய பந்து வீச்சு, அவர்களின் வேகம் மற்றும் திறமை என்னை வெகுவாகக் கவர்கிறது. ஆல்ரவுண்டராகப் பாண்டியாவும் தனது பணியை சரியாக செய்கிறார் என்று இந்திய அணியை புகழ்ந்து தள்ளினார் டாமினிக் கார்க்.

^