எனக்கு எதிராக சதி: மோடி

ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “முந்தைய அரசுகளின் ஆட்சியில் இடைத்தரகர்களால் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் ஒரு முடிவு கட்டியுள்ளோம். ஆறு கோடிக்கும் மேற்பட்ட போலி குடும்ப அட்டைகள், போலி சமையல் எரிவாயு இணைப்புகள், போலி பென்சன்களை நாங்கள் பிடித்துள்ளோம். இல்லாத ஆட்களின் பெயர்களில் பல கோடிக்கணக்கான பணம் உறிஞ்சப்பட்டதுஇது போன்றவர்களின் சட்டவிரோத விருப்பங்களுக்கு மத்திய அரசு ஒரு முடிவு கட்டியுள்ளதால், அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டின் காவலாளியை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர். பல தரப்புகளிலும் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அதில் சில சதிகாரர்கள் தற்போது கூட்டாக இணைந்துள்ளனர். மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நிறுத்திய பிறகே இந்தக் காவலாளி அடங்குவான் என்பதை இறைவன் ஜகநாதனின் ஊரில் இருந்துகொண்டு நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.நாட்டின் முன்னேற்றத்துக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. கல்வி, இளைஞர்களின் வருமானம், முதியவர்களுக்கு மருந்துகள், விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம், வெகுஜன மக்களுக்குச் செவிசாய்ப்பது ஆகிய ஐந்து விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

^