வெறும் 5 சதவீதம் தான் வெளியிட்டு இருக்கிறேன். மேத்யூஸ்

 .கொடநாட்டில் நடந்த தொடர் கொலைகள், அதன் பின் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை? அதன் பின்னர் தற்போது தான், கொலை தொடர்பான ஆவணப்படத்தை பத்திரிகையாளர் மேத்யூஸ் வெளியிட்டார். அவருடன் சயன், மனோஜ் ஆகிய குற்றவாளிகள் பேட்டி அளித்தார்கள் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த கொலைகளுக்கு முக்கிய காரணகர்த்தா என தெரிவித்தார்கள் அதன் பின் தமிழக அரசியல் களம் பரபரப்பானது மறுநாளே சயன், மனோஜ்ஜை டெல்லியில் கைது செய்தது தமிழக போலீஸ். அதற்கு முன்னால் மேத்யூஸ் இந்த வீடியோவை வெளியீடும் படி சில மீடியாக்களை அணுகி பேசி இருக்கிறார். ஒரு மாநில முதல்வரை பற்றிய குற்றச்சாட்டு என்பதால், மீடியாக்கள் மறுத்து விட்டன. அதன் பின் போராடி ஒரு சேனலை சம்மதிக்க வைத்தார் மேத்யூஸ். கடைசி நேரத்தில் அதுவும் பின் வாங்கி விட்டது. .... தான் வெளியிட்ட பிறகும், இந்த விவகாரத்தில் தேசிய மீடியாக்கள் பெரிய ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம் மத்திய அரசு தான் என்கிறார் மேத்யூஸ் அதே போல் தமிழக பாஜகவின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழசை ஆகியோர் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். வரும் லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக எடப்பாடியை காப்பாற்ற முயற்சி செய்கிறது என்கிற குற்றசாட்டை வைக்கிறார் மேத்யூஸ் இந்த சூழ்நிலையில், சயன், மனோஜ் கைது செய்யபட்டு, விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு விசாரணை முடித்து எழுப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள் எழும்பூர் மாஜிஸ்திரேட் சரிதா விசாரணை நடத்தி , சயன், மனோஜ்ஜை விடுதலை செய்தார் இதில் தெம்பான மேத்யூஸ், கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியிட்டு இருப்பது வெறும் 5 சதவீதம் தான் இன்னும் நிறைய இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார் இந்த சூழ்நிலையில் மேத்யூஸ்ஸை கைது செய்தால் பிரச்சனையாகி விடும் என்பதால், அவரின் நடவடிக்கையை கண்காணித்து கொண்டு இருக்கிறது தமிழக போலீஸ்

^