டிராபிக் போலீசாக வலம் வரவுள்ள ரோபோ...இந்தியாவிலே முதன் முறையாக தமிழக காவல்துறையில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறையில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று டிராபிக். பல்வேறு இடங்களில் சிக்னல் வசதி இருந்தும் வாகன ஓட்டிகள் அதனை சரியாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் நிலவுகிறது. மறுபுறம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்ய அனைத்து சிக்னல்களிலும் இல்லாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது நடைபயண வாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் டிராபிக் போலீசாக ரோபோ விரைவில் வலம் வர உள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது, வாகனங்களை சீர்படுத்தும் பணியில் இந்த ரோபோ ஈடுபட உள்ளது. இந்த ரோபோவை இன்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் பாரவையிட்டனர்.

^