சென்னையில் உள்ள அனைத்து காவலர் நிலையங்களிலும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவலர்கள் குடியிருப்புகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் அமைந்துள்ள பரங்கிமலை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் சார்பில் சென்னை காவல் துறையினர் மற்றும் லயான்ஸ் கிளப் உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் கலந்து கொண்டார்.இந்த பொங்கல் விழா சிலம்பாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.மேலும் பொங்கல் விழாவில் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசு பொருட்களையும் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே விசுவநாதன் வழங்கினர்.காவலர் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் காவலர் குடும்பத்தினை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன் பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானையில் அரிசி ஈட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் , காவலர்கள் குடியிருப்புகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

^