MGR நூற்றாண்டு விழா இன்றி நினைவு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவை விழா இன்றி திரைகளை மட்டும் அகற்றி திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமானப் பணிகளுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் வருவதால் நினைவு வளைவை திறக்க விதித்த தடையை நீக்குமாறு அரசுத் தரப்பில் கோரப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதைத் தவிர வேறென்ன செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்ததை தவிர, அவரது கொள்கை, கருத்துக்களை பரப்ப என்ன செய்யப்பட்டது என்றும் மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க திறப்புவிழா நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்றலாம் என்று கூறி விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

^