அமைச்சருக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் . .

.

அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணையை விசாரிக்க வேண்டும் என்று பொது வெளியில் பேசி இருந்தார் அமைச்சரின் இந்த பேச்சு எதிராக ஐஏஏஸ் அதிகாரிகள் சங்கம் கொதித்து போய் விட்டது. அவசரமாக கூட்டம் கூட்டி, அதில் பேசிய தலைவர் சண்முகம், ஐஏஎஸ் அதிகாரிகளின் பவரை காட்ட வேண்டிய சரியான தருணம் வந்துவிட்டது. இனி சும்மா இருக்க வேண்டிய அவசியமில்லை? என கொந்தளித்து இருக்கிறார். அப்படியே, ஐஏஎஸ் .ராதாகிருஷ்ணனிடம் , அமைச்சரின் பேச்சுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். இதற்கு சங்கத்தின் சார்பாக பதில் சொல்லுவோம் என்று சொல்லி இருக்கிறார். அதன் பின்னர், சங்கத்தின் தீர்மானத்தை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்து இருக்கிறார்கள் இது ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட பிரச்சனையாக நினைக்க வேண்டாம். நமக்கு ஏற்பட்டதா நினைப்போம்? ஆறுமுகசாமி ஆணைத்தில் தேவைப்படும் போது ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து இருக்கிறார். ஜெயலலிதாவிற்கு அளித்த மருத்துவத்திற்கு, ராதாகிருஷ்ணன் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? அது டாக்டர் சம்பந்தபட்ட விஷயம்.. அமைச்சர் இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளை தரக்குறைவாக பேசலாமா?என சொல்லி இருக்கிறார் தலைவர் சண்முகம். கிரிஜா வைத்தியநாதனும் அவர்களின் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார். இதனால் ராதாகிருஷ்ணன் சுகாதாரதுறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றபடலாம்? என்கிறார்கள்.

^