இருக்கைகள் காலி... சாலையில் சென்றவர்களை மடக்கிப் பிடித்து கொண்டுவந்த அதிமுகவினர்

திருச்சியில் அமைச்சர்கள் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததால், சாலையில் சென்று சென்றவர்களை வளைத்துப் பிடித்து அமர வைத்தனர். திருச்சி பாலக்கரையில் கூட்டுறவு பண்டகச் சாலை வளாகத்தில், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், வளர்மதியும் பங்கேற்க இருந்தனர். ஆனால், பயனாளிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்த அளவு வராததால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இதையடுத்து, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், சாலையில் சென்றவர்களை சென்றவர்களை மடக்கிப் பிடித்து நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தனர். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வருவது தாமதமானதால், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் நீண்டநேரம் காத்திருந்தார். ஓரளவு இருக்கைகள் நிரம்பிய பின்னர், நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினர்.

^