அதிமுக , பாமக கூட்டணி உறுதியாகி விட்டது

அதிமுக , பாமக கூட்டணி உறுதியாகி விட்டது என்கிறார்கள். கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையை அனைத்து எதிர்கட்சிகளும் குறை சொன்ன போது, பாமக மட்டும் அதில் நிறைகள் அதிகமாக இருக்கிறது என கருத்து தெரிவித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசி இருக்கிறார் அதே சமயத்தில் தான் திமுக சார்பாக துரைமுருகன் ராமதாஸ்சிடம் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் வடமாவட்ட திமுக செயலாளர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை? அதன் பின் ராமதாஸ், காங்கிரஸ், தினகரன், பாமக என தனி -கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தார். அதே போல் கடந்த வருடம் பாமகவின் பொதுகுழு கோவையில் ஏற்பாடு செய்யபட்டது. அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் வேலுமணி. கோவை மாவட்ட பாமக முக்கிய பிரமுகர்கள் மூலமாக ராமதாஸ்சிடம் பேச்சு வார்த்தை நடத்தி விட்டார் அதன் பின் பொதுகுழுவிற்கு வந்த ராமதாஸ்ஸை அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் தனியாக ராமதாஸ் தங்கி இருந்த ஹோட்டலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிமுகவும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றால் போதும். ஆட்சி அமைத்து விடலாம்? பிறகு ஆட்சியில் பாமகவிற்கு பங்கு கொடுக்கிறோம் என உறுதி கொடுத்து இருக்கிறார்கள் அதன் பேரில் பாமக , அதிமுக உடன் கூட்டணி வைக்கு போவது உறுதி என்கிறார்கள்.

^