வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரி

வேலூர் அருகே வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலரை திருப்பத்தூர் சார் ஆட்சியர் பாராட்டினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் அவர் ஒப்படைத்தார்.

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் இதுவரை 15 டன் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அதிகாரி கண்ணனுக்கு திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்துறையினர் உடன் இருந்தனர்.

^