கள்ளக்காதல் பிரச்னை முதியவர் கொலை

நுங்கம்பாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தபழனியின்(60) உறவுக்கார பெண்ணுக்கும் அதே பகுதி சரவணனுக்கும்(32) கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. பழனி அதை கண்டித்துள்ளார். கடந்த 24ம் தேதி கள்ள ஜோடி தகாத உறவில் ஈடுபட்டதை பழனி பார்த்து கண்டித்தார். ஆத்திரம் அடைந்த சரவணன், பழனியை பிடித்து தள்ளியதில் பீரோவில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் மீது 307 பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் சரவணன் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

^