ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் சரண்

சென்னை சிறுவன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் சரண் அடைந்துள்ளனர். சிறுவனின் தாய் மஞ்சுளா உட்பட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நெசம்பாக்கம் சிறுவன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் மஞ்சுளாவின் மகன் ரித்தீஷ் சாய் கொலை வழக்கில் நாகராஜ் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

^