ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக பிறந்த ‘2019’

உலகத்திலேயே முதலாவதாக சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவில் நேற்று புத்தாண்டு பிறந்தது. உலகில் முதலில் புத்தாண்டு பிறக்கும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துஸ தீவு என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி நேற்று மாலை 3.30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு தலைநகர் வெலிங்டன்னில் டைம்ஸ் சதுக்கத்தில் 3 மணி நேரத்துக்கு முன்னதாக வாணவேடிக்கைதொடங்கின. இதை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பார்த்தனர். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. அங்கு சிட்னி துறைமுகத்தில் முன்னெப்போதும் இல் லாதஅளவுக்கு மிக நீண்ட நேரம் வாணவேடிக்கை நடந்தது.

^