தினகரனா? திமுகவா?

. .

தினகரன் திருவாரூர் தொகுதியில் அனைத்து கட்சிகளுக்கும் ஷாக் கொடுக்க இருக்கிறார் என்கிறார்கள் ஆர்.கே.நகர்போல் அனைத்து திமுகவிற்கு டெபாசிட் கிடைக்காமல் செய்வார் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் சமீபத்தில் செந்தில்பாலாஜி தினகரனிடம் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தது தினகரனுக்கு திமுகவின் மீது கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது இந்த சூழ்நிலையில் திருவாருர் இடைத்தேர்தல் அறிவிக்கபட்டு இருக்கிறது திருவாரூர் தொகுதி தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடி மாவட்டத்தில் வருகிறது. திரும்பவும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர்கள் பேசி கொண்டு இருக்க,அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு , தினகரன் திருவாரூர் தொகுதியை கைப்பற்றுவார் என்கிறார்கள். இடைத்தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, அவர்கள் தொகுதியில் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதனால் திருவாரூர் தொகுதியில் திமுக அச்சத்துடன் தான் இருக்கிறது என்கிறார்கள்

^