திருவாரூருக்கு செல்வியா? உதயநிதி ஸ்டாலினா?

. .

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 28 தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது இந்த சூழ்நிலையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் அந்த தொகுதியை திமுக தக்க வைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார் ஏற்கனவே அந்த தொகுதிக்கு தேர்தல் பணியாளர்களை நியமித்து களப்பணியில் இறங்கி திமுக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த தொகுதியில் திமுகவின் வெற்றி மிக பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது சட்டமன்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும் என்றும், ஸ்டாலின் தலைவரான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதிக கவனமாக இருக்கிறார் ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் மிகவும் நம்பிக்கையானவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், கலைஞர் உயிரோடு இருந்த போது, வீதி விதியாக இறங்கி கலைஞருக்காக ஒட்டு கேட்ட மகள் செல்விக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவிக்கிறார்கள் அத்துடன், உதயநிதி ஸ்டாலின் பெயரும் அடிப்படுகிறது.

^