மஞ்சுவாரியருக்கு ரீமா கல்லிங்கல் ஆதரவு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஒடியன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து, சோசியல் மீடியாவில் மோகன்லால் ரசிகர்கள் பலரும் இந்த தோல்விக்கு காரணமாக மஞ்சு வாரியார் மீது குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய மஞ்சுவாரியருக்கு, இது மேலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மஞ்சுவாரியரின் தோழி நடிகை ரீமா கல்லிங்கல், மஞ்சுவாரியருக்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அதாவது, இந்த படம் ஓடியிருந்தால் அதன் வெற்றிக்கு நிச்சயமாக மஞ்சுவாரியர் காரணம் என யாரும் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் சம்பந்தமே இல்லாமல் மஞ்சுவாரியரை நோக்கி கை காட்டுகிறார்கள் என காட்டமாக கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்.

^