ஜீரோவில் கெஸ்ட் ரோலில் மாதவன்

பாலிவுட்டில் தற்போது நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜீரோ. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். ஷாருக்கான் ஜோடியாக கத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முக்கிய வேடங்களில் மாதவனும் அபய் தியோலும் நடித்திருக்கிறார்கள்இதில் நாயகி அனுஷ்காவின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒரு கதாபாத்திரமாக வந்து செல்கிறாராம் மாதவன், இதற்கு முன் தனு வெட்ஸ் மனு படத்தில் ஆனந்த் எல்.ராயுடன் மாதவன் பணிபுரிந்துள்ளார். அதேபோல அவரது ராஞ்சனா படத்தில் தனுஷுடன் சேர்ந்து இன்னொரு ஹீரோவாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபய் தியோல். இந்த நட்பின் அடிப்படையில் தற்போது இவர்கள் இருவரும் ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்களாம்.

^