ஸ்மித்தை தொடர்ந்து துரத்தும் சோகம்!

பங்களாதேஷ் பிரிமீயர் லீக் போட்டியில் விளையாட அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பி.சி.பி. தடைவிதித்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பங்களாதேஷ்பிரிமீயர் லீக் T20 தொடரை நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சொயிப் மலிக் மலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது. இவர் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. இதுகுறித்து பி.சி.பி. தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில், “பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை. ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
^