சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் திருட்டு..! அமைச்சர் குற்றசாட்டு..!!

 . .முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சோனியா காந்தி கலந்துகொண்டு கலைஞர் சிலையைத் திறந்துவைத்தார். இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர, கேரள, புதுச்சேரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். அதன்பிறகு ஒய்எம்சிஏ திடலில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தலைவர்களை வரவேற்றுப் பல இடங்களில் பேனர்களும் கட்-அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுக தலைவரின் தந்தை சிலை திறப்பு விழாவுக்கு பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் எங்கிருந்து மின்சாரம் எடுத்தார்கள்? சென்னை மாநகராட்சி மின்சாரத் தொகுப்பிலிருந்துதான் திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர். அதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என்று கூறி தனது செல்போனில் அதுகுறித்த வீடியோவையும் பத்திரிகையாளர்களுக்கு காட்டினார். தொடர்ந்து, “சாலையில் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்கள், மின்விளக்குகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சி மின்கம்பங்கள் மூலமாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

^