விரைவில் இரு அணிகளும் இணைப்பு . .

. .

தினகரனை கழற்றி விட்டு அதிமுகவில் அமமுக இணைய இருக்கிறது அமமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடியாத படி ஸ்டாலின் திட்டம் போட்டு, காங்கிரஸ் பக்கம் போய் விட்டார் அதனால் அமமுக தனித்து போட்டியிட வேண்டிய அவலத்தில் இருக்கிறது இந்த சூழ்நிலையில் அதிமுக , பாஜக உடன் கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக பிரிந்து கிடப்பதால், பலகீனமாக இருக்கிறது. அமமுக தனித்து போட்டியிட்டால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் ஒட்டுகள் சிதறும், திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் என்பதால், இரு அணிகளின் இணைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன முதல்வர் பதவி பழனிசாமிக்கும், துணை பொது செயலாளர் பதவி தினகரனுக்கும் கொடுக்கபடலாம் என்கிறார்கள் துணை முதல்வர் மற்றும் பொது செயலாளர் பதவி ஒபிஎஸ்சுக்கும், அவை தலைவர் பதவி பொன்னையனுக்கும், பொருளாளர் பதவி செங்கோட்டையனுக்கும் கொடுக்கபடலாம் என்கிறார்கள்

^