மோடி அரசை அகற்றனும் - டிடிவிக்கு சசிகலா உத்தரவு!!!

அ.தி.மு.கவோடு இணைவதில் சசிகலாவுக்கு எந்தத் தயக்கம் இல்லை என்றும், மோடி அரசை வீழ்த்தி காட்ட வேண்டும் என்பதை நினைத்து தான் ஜெயலலிதா கல்லறையில் அடித்து சசிகலா சபதம் செய்ததாக அரசியல் களத்தில் சில செய்திகள் வெளியாகி உள்ளது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏகளுடன் நேற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரபல வாரஇதழ் ஒன்று திரைமறைவில் நடக்கும் அரசியலை தகவலாக வெளியிடும் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.அதில்,இந்த சந்திப்பின் போது, வழக்கத்துக்கு மாறான உற்சாகத்தில் சசிகலா இல்லை என்றும், அ.ம.மு.க-வில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் இளவரசி குடும்பம் மூலமாக உடனுக்குடன் சசிகலா அறிந்துகொள்வதாகவும், ஆகையால் அ.ம.மு.கவின் செயல்பாடுகள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை உள்ளிட்ட விஷயங்களால் சசிகலா மிகுந்த வேதனையில் இருந்ததாகவும் செய்திகள் அதில் உள்ளது.குடும்பத்துக்கு மூத்தவர்கள் எல்லாம் விலகித் தனித்தனியாக இருப்பதில் தனக்கு எந்தவித உடன்பாடில்லை என்றும், நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், நமக்கு ஆபத்து தான் வந்து சேரும், ஜெயலலிதா சமாதியில் அடித்து சத்தியம் செய்ததே, மோடி அரசை அகற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என சசிகலா டிடிவி தினகரனிடம் கூறியிருப்பதாகவும்,நமக்கு எதிராக பா.ஜ.கவின் ஆதரவாளர்கள் சிலர் மட்டும் செயல்படவில்லை என்றும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்றும், இந்தச்சதி தனக்கு எதிராக மட்டும் இல்லை, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் உருவான சதிதான் என சசிகலா டிடிவி தினகரனிடம் குறிப்பிட்டிருப்பதாகவும், ஆகையால் தற்போதுள்ள சூழலில் மோடி எதிர்ப்பை பலப்படுத்துவது லாபமா, பலவீனப்படுத்துவது லாபமா என்பது குறித்து பாருங்கள் என டிடிவி தினகரனுக்கு சசிகலா அறிவுரை வழங்கியதாக அதில் செய்திகள் உள்ளது.மேலும், தான் ஒரு தீர்க்கமானவள் என்றும், மோடி எதற்காக நம்மை வீழ்த்தினார் என்ற உள்கணக்கு தனக்கு மட்டும்தான் தெரியுமென்றும், அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வரப்போகும் தேர்தலில் என்ன வியூகம் வேண்டுமானாலும் மோடி வகுத்துக்கொள்ளட்டும். நாம் ஒற்றுமையாக இருந்து செயலாற்றாமல் போய்விட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம் எனப் சசிகலா தினகரனிடம் அழுத்தமாக தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

^