கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை இன்று தற்போது திறந்து வைத்துள்ளார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா.

கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது.

இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரையின் சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் பணி நடந்தது. புனரமைக்கப்பட்ட அண்ணாதுரை சிலையும், கருணாநிதி சிலையும் இன்று திறக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.அதன்படி இன்று காலை அண்ணாதுரையின் சிலையை முக் ஸ்டாப்களின் திறந்து வைத்தார்.தற்போது மாலை தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் .இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும், ரஜினி,பிரபு,நாசா மற்றும் வடிவேலு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற உள்ளது. 

^