​கலைஞர் சிலை திறப்பு விழாவில் தனியரசு கலந்து கொள்ள மாட்டார்

. . .

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிழுன் அன்சாரி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக உடைந்தது. அதன் பின் யாருக்கும் ஆதரவளிக்காமால் 3 பேரும் தனித்து செயல்பட ஆரம்பித்தார்கள் இருந்தாலும் திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தான் செயல்பட ஆரம்பித்தார்கள் இந்த சூழ்நிலையில், நீங்கள் 3 பேரும் அதிமுக சின்னம் இரட்டை இலையில் நின்று தான் வெற்றி பெற்றீர்கள்? திமுகவிற்கு தாவினால் கட்சி தாவல் சட்டத்தின் படி உங்கள் எம்எல்ஏ பதவி பறிக்கபடும்? என எச்சரித்தால், அவர்கள் திமுக பக்கம் போகாமல் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு 3பேருக்கும் அழைப்பிதழ் போய் இருக்கிறது. இருந்தாலும் தனியரசு நான் கலந்து கொள்ள மாட்டேன் என சொல்லி விட்டார்.

^