டிசம்பர் 11-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-அதிமுக அறிவிப்பு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வருகிற டிசம்பர் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது அதிமுக.இந்த கூட்டத்தில் வரஇருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தபடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

^