இந்திய - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார்?

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடையும் என முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏதோ ஒரு பலவீனம் காரணமாக இந்தியா தோல்வியடையும் என அவர் தெரிவித்துள்ளார். நான் அவுஸ்திரேலியாவே வெற்றிபெறும் என தெரிவிக்க விரும்புகின்றேன் ஆனால் அதற்கான காரணம் என்னவென என்னிடம் கேட்காதீர்கள் என சப்பல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்தியா விளையாடிய விதம் குறித்து நான் பலத்த ஏமாற்றமடைந்துள்ளேன் அவர்கள் அங்கு தொடரை வென்றிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள சப்பல் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழக்கும் என நான் கருதுவதற்கு அது காரணமாகயிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். திறமை என்ற அடிப்படையில் பார்த்தால் அவர்கள் இந்த தொடரை வெல்லவேண்டும் ஆனால் ஏதோ ஒரு பலவீனம் இந்திய அணியிடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தோல்வியடையும் என நான் கருதுவதற்கு மற்றொரு காரணம் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எனவும் தெரிவித்துள்ள சப்பல் அவுஸ்திரேலிய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர் அவர்கள் தங்கள் நாட்டின் சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்துவார்கள் எனவும் சப்பல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணிதலைவர் விராட்கோலி மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார் எனவும் சப்பல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கும் விராட்கோலிக்கும் இடையிலான மோதலை நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் இது மிகவும் சிறப்பான மோதலாக விளங்கும் கடந்த முறை அவுஸ்திரேலியாவில் கோலி சிறப்பாக விளையாடினார் என சப்பல் தெரிவித்துள்ளார்.

^