நெதர்லாந்து கோல் மழை

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 7- 0 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை மிக எளிதாக வீழ்த்தியது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து இடைவேளையின்போது 3-0 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து கோல் மழை பொழிந்த அந்த அணி ஆட்ட நேர முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் ஹெர்ட்ஸ்பெர்கர் ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார் (12வது, 29வது, 60வது நிமிடம்), புருய்சர் (21’), வீர்டன் (35’), கெம்பெர்மேன் 42’), பிரிங்க்மேன் (57வது நிமிடம்) தலா 1 கோல் போட்டனர். மலேசிய அணியால் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. நெதர்லாந்து அணி 3 புள்ளிகளை பெற்றது.

^