யாதீஷ் சந்திராவை பாராட்டும் கேரளா அரசு!!!!

சபரிமலை பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட எஸ்.பி.யாதீஷ் சந்திராவின் பணியை பாராட்டும் விதமாக கேரளா அரசு பாராட்டுக்கடிதம் ஒன்றினை யாதீஷ் சந்திராவிடம் அளித்துள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு சபரிமலை பகுதியிலிருந்து பணிமாற்றம் கிடைத்தாலும், அவருக்கு கேரளா அரசு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சென்ற வாகனத்தை பம்பை பகுதியில் கேரளா காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது எஸ்.பி.யாதீஷ் சந்திராவுக்கும், மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் நடுவில் நடந்த வாக்குவாதம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கேரளா மற்றும் தமிழகத்தில் எஸ்.பி யாதீஷ் சந்திரா மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.ஆனால் மத்திய அமைச்சரை அவமதித்தாக கூறி அவரை பணியில் இருந்து அகற்ற வேண்டுமென தேசிய அளவில் பா.ஜ.க போராட்டம் நடத்தியது. அதன் விளைவாக எஸ்.பி யாதீஷ் சந்திரா சபரிமலை பாதுகாப்பு பணியிலிருந்து கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டார்.மேலும் எஸ்.பி யாதீஷ் சந்திரா தனது பதவியை தவறுதலாக பயண்படுத்துகிறார் என்று கே.பி.சசிகலா என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பினை சேர்ந்த கே.பி.சசிகலா கடந்த நவம்பர்17ந்தேதி சபரிமலை பகுதிக்கு சென்றப்போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தான் 50வயதுக்கு மேற்பட்டவர் என்று தெரிவித்தும், கேரளா போலீசார் அவர் ஹிந்து அமைப்பினை சேர்ந்தவர் என்பதாலும், அவரது நோக்கம் சபரிமலை போராட்டத்தை தூண்டும் வகையில் அமைந்ததாலும் போலீசார் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு பலிவாங்கும் விதமாகவே தற்போது யாதீஷ் சந்திரா மீது கே.பி சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார் என்று செய்திகள் கூறப்படுகிறது.   

^