கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை!!!

கோவை மாவட்டம் மற்றும் வரப்பாளையம், துடியலூர், பகுதிகளில் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வருகிறது.

கோவை துடியலூர் குருடம்பாளையம் பகுதியில் நேற்று மாலை உணவுத்தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றையானை அதிகாலை வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள காட்டில் தஞ்சமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை கண்காணித்து வருகின்றனர். கூட்டத்தை பிரிந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

யானை இருக்கும் பகுதியில் மக்கள் யாரும் செல்லாத வண்ணம் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அமைத்து அந்த யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும் கும்கி யானை ஒன்றை கொண்டு வந்து அந்த ஒற்றை குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

^