மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த 20 மோப்ப நாய்கள் , முதல்வர் நடவடிக்கை !!!

பீகார் மாநிலத்திற்கு மூன்றாம் முறையாக முதல்வரான நிதிஷ் குமார், அம்மாநிலத்தில் தீவிர மதுவிலக்கை அமலாக்கினார். இதற்கு பீகார் போலீஸின் ஒத்துழைப்பு சமீபகாலமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது .

அண்டை நாடான நேபாளில் இருந்து கடத்தப்படும் மது மற்றும் போதைப் பொருட்கள் அதிகமாகி வருகிறது. இதற்காக, அதன் வாகன ஓட்டுநரும், கடைநிலை ஊழியர்களும் கைதாகின்றனரே தவிர, முக்கியக் குற்றவாளிகள் பிடிக்கப்படுவதில்லை.இதனால், போலீஸாரை நம்பி இனி பயனில்லை என கருதிய நிதிஷ் குமார். இதன் மாற்று முயற்சியாக , 20 மோப்ப நாய்களை மாநில அரசு சார்பில் வாங்கியுள்ளார்.கடந்த ஜூலையில் அவை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போது ரூ.35 லட்சம் விலை கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது .இவற்றின் பயிற்சியாளர்களுக்கும் சேர்த்து தெலங்கானாவின் மொய்னாபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்தப் பயிற்சிகள் முடிந்த பின் அடுத்த வருடம் பிப்ரவரி முதல் பிஹாரில் மதுவிலக்கு அமலாக்கும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

^