சி.எஸ்.கே அணி தான் என் வாழ்க்கையை மாற்றியது!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது என மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ப்ராவோ தெரிவித்துள்ளார். தற்போது சவுதியில் உள்ள ஷார்ஜா நகரத்தில் 10 ஓவர் போட்டிகள் கொண்ட டி-10 தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக ப்ராவோ விளையாடி வருகிறார். அண்மையில் ஒரு பிரபல தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.அப்போது செய்தியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த ப்ராவோ , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது, அதனை நான் அதிகாரப்பூர்வமாக சொல்வேன், தற்போது தன்னிடம் என்னவெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் தனக்கு அங்கு கிடைத்த வெற்றியின் மூலம் வந்தது. கிரிக்கெட் குறித்து அங்கு கற்றுக்கொண்டேன், பயிற்சியாளர் பிளம்பிங், கேப்டன் தோனி ஆகியோர் அருமையானவர்கள். அணியின் உரிமையாளர்களும் வீரர்கள் மீது எதுவும் திணித்து அவர்களுக்கு பதற்றத்தை கொடுத்தது கிடையாது. அது ஒரு குடும்பம் போன்றது. எனக்கு சென்னையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர், சென்னைக்காக விளையாடுவதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையை சென்னையில் தான் முடிக்க விரும்புகிறேன்.சமீபகாலமாக இந்தியாவின் 20 ஓவர் அணியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார், அது குறித்து உங்களது கருத்து என்ன? என்று செய்தியாளர் கேட்டப்போது? தோனி போன்ற வீரர்கள் அவர்களாக நினைக்கும் வரை அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வராது, கிரிக்கெட்டில் எப்போதும் இதை போன்ற பேச்சுகள் வரத்தான் செய்யும், அணியும் நிறைய புதுமுக வீரர்களை அழைக்கும், ஆனால் முடிவு என்பது அந்த வீரரை பொறுத்து தான் அமையும். என்னை பொறுத்த வரை எம்.எஸ்.தோனி அனைத்தையும் சாதித்துவிட்டார். தற்போது முடிந்த ஐ.பில்.தொடரிலும், அவர் திரும்ப, திரும்ப தன்னை நிரூபித்துக்கொண்டு தான் இருந்தார். அதுநாள் தான் உலகில் தலைசிறந்த வீரராக அவர் உள்ளார். அவர் முடிவு குறித்து அவரே முடிவு செய்வார். மற்ற யாராலும் அவருடைய முடிவை குறித்து அறிவிக்க முடியாது.இவ்வாறு சி.எஸ்.கே அணி குறித்தும், நம்ம தல தோனி குறித்தும், சென்னை நகரத்தை குறித்தும் நம்ம சிங்ககுட்டி ப்ராவோ விரிவாக பேசினார்.

^