டிச.4யில் திமுக நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம்!!!

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சொளந்தராஜன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளைக் மேற்கொண்டு வருகிறது என்றும், ஆனால் எதிர்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம்சாட்டி வருவதாகவும் அவர் கூறினார்.மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டம் என்பது கண்துடைப்பு நாடகமென்றும்,திருச்சி அருகில் உள்ள மாவட்டங்கள் கண்ணீரில் இருக்கும் போது கண்ணீரைக் துடைக்க வேண்டியவர்கள் கண்துடைப்பு நாடகத்தைக் நடத்துகிறார்கள் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை விமர்சித்தார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைப்பெறுகிறது, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கர்நாடகா சென்று அங்குள்ள காங்கிரஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தலாமே என கேள்வி எழுப்பினார்.மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும், அதுவும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பா.ஜ.கவும் எதிர்ப்பு தான் தெரிவிக்கும் என கூறினார்

^