எங்களைப்போன்ற அதிகாரிகள் எங்கே பணியமர்த்தினாலும், நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் - சகாயம் ஐ.ஏ.எஸ்

கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பணிகள் எவ்வாறு நடக்கிறது,நிவாரணப் நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என தன்னால் கூற இயலாது என்றும்,அங்கு தான் பொறுப்பில் இல்லாததால் தன்னால் அது குறித்து பதிலளிக்க முடியாது என சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஐ,ஜி பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டப்போது.

நான் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியாக அரசுத்துறையில் இருக்கின்ற காரணத்தால் இதுகுறித்தும் தன்னால் கூற இயலாது என்று தெரிவித்தார்.எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் அங்கு சென்று சிறப்பாக செயல்படுவோம் என்றும் கூறினார்.அனைத்து நிர்வாகப் பிரச்சனைகளையும் நாம் அரசிடம் தான் எதிர்பார்க்க முடியும். அனைத்து நிர்வாகப் பிரச்சனைகளுக்காகவும் நாம் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்றும் தெரிவித்தார். 

^