மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவிற்கும், அமைச்சர்க்கும் சண்டை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அதிமுக எம்.எல்.ஏ சண்டையிட்டு சென்ற காட்சி தற்போது வையராகி வருகிறது.

கஜா புயல் கரையை கடந்தப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களையும் புரட்டி போட்டுவிட்டு தான் சென்றது. அப்படி புரட்டி போட்டா மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று, இங்கும் பல்வேறு விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.அப்படி கஜா புயலால் பாதிப்படைந்த திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள வாழைதோட்டத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி , மாவட்ட ஆட்சியர் இராசாமணி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.நொச்சியம் பகுதி அருகே அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள வாழைத் தோட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அவர்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.அப்போது மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு இடம் கொடுக்காமல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடைத்துக்கொண்டு இருந்ததால், அமைச்சர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு போட்டோ எடுக்காமல் அங்கிருந்து கோபத்தில் சென்றார் எம்எல்ஏ பரமேஸ்வரி.பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுகவினர் அவரை சமாதானப்படுத்தி அவரை மீண்டும் வரவழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலே எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் இந்த நடவடிக்கை அமைச்சர் மற்றும் அதிமுகவினரை ஒரு நிமிடம் திக்குமுக்கு ஆட வைத்துள்ளது. 

^