தமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக் கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக் கூடாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி எழுதிய 'பரீட்சைக்கு பயமேன்' என்ற புத்தகத்தை, நாகர்கோவிலில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த காரணத்தை கொண்டும் பிற மாநிலங்கள் தமிழகத்தை பாதிக்கும் வகையில் அணைகள் கட்டுவதை ஏற்க முடியாது என்றும், குறிப்பாக மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் மூலமாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

^